வகுப்பறைக்குள் நுழைந்திடும் அன்புத்தாய்,
வகுப்பறைக்குள் நுழைந்திடும் அன்புத்தாய்,
எங்கள் வாழ்வில் ஒளிதரும் விண்மீனாய்!
அறிவை மட்டும் புகட்டும் ஆசிரியை அல்ல,
எங்கள் குணத்தை வளர்க்கும் அன்னையல்லோ!
தவறு செய்யும்போது கண்டிக்கும் அதிகாரம்,
நாங்கள் சோர்ந்துபோனால் தாங்கிடும் அன்புக்கரம்!
பெற்றவர் போல எங்களை உரிமையோடு திட்டுவார்,
எங்கள் நலம் விரும்பி நெஞ்சார வாழ்த்திடுவார்!
படிப்பைத் தாண்டி விளையாட்டிலும்
ஈடுபாடு கொள்ளச் செய்வார்,
பயத்தைப் போக்கி எங்களை என்றும்
முன்னேறச் சொல்வார்!
ஓடி ஆடி வெல்லும் திறனை எமக்குள் விதைப்பார்,
தோல்வி நேரினும் அன்போடு எமக்குத் தோள் கொடுப்பார்
கலையினில் உயர மேடை ஏற்றி மகிழ்வார்,
எங்கள் திறமைகளைக் கண்டு கண் கலங்கி நெகிழ்வார்
படிப்பிலும் விளையாட்டிலும் எங்களைச்
செதுக்கும் அன்னை,
என்றும் எங்களை வழிநடத்தும் எங்கள்
வாழ்வின் நல் துணை!
💬 கருத்துகள் (0)