அறையின் கதவுகளை
அறையின் கதவுகளை
நானே திறக்கிறேன்.
உடமைகளை அவள் விரும்புவதான இடங்களிலேயே
அடைக்கலப்படுத்திவிட்டு
வெறுமை நிரம்பி வழியும்
கூடத்தைக் கடந்து
அவளின்
வாசனைக் கெட்டித்துக்கிடக்கும்
சமையலறையின் முனையில் நின்று
மூச்சிழுத்து
நுரையீரலைச் சுத்தப்படுத்திக்கொள்கிறேன்.
என்னை வந்து மோதுமவள்
பிம்பங்களை உடைத்து
முகம் கழுவி
காற்றுக்கு நகர்கிறேன் பின்பு.
எப்போது வருவாள்.?
முத்தங்கள் சருகாகிவிட்டன.!
💬 கருத்துகள் (0)