உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சில்லிடும் உன் தேகத்தை

சில்லிடும் உன் தேகத்தை
எனக்குச் சொல்லிடும் வேகத்தில் வந்து
சாரல் பூசிப்போய்விட்டாய்.
தாழப் பறந்திடும் செந்நாரை விரட்டி
கூடுசேர்ப்பிக்கும்
மழையின் கதகதப்பிலிருக்கிறேன்.
பொருள்வயின் பிரிந்தயென் தலைவ
உன் குழந்தமையை
கொஞ்சிக் களிக்க வேண்டும்
உயிர்வயின் எப்போது வருவாய்?
தனிமைப் பூத்துக் காய்த்துக் கனிந்து
நறுமணம் பரப்பிக் கிடக்கிறது.!

👁 1 வாசிப்பு ☰ 12 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.