மிக நீண்ட தூரங்களைக்
மிக நீண்ட தூரங்களைக்
கடக்க வேண்டியிருக்கிறது.
வாசனை மிதக்குமுன்
மூச்சுக்காற்றையும்
இரவுகள் நிறைக்குமுன்
கனவுகளையும்
இளைப்பாறுதலுக்குக் கொஞ்சம்
பொதிந்துகொள்கிறேன்.
கண்களை மூடுவதிலும்
திறந்துகொள்வதிலுமுனக்கு
கவனமிருக்கட்டும்.
நீதானென் ஆதியும் அந்தமும்.!
💬 கருத்துகள் (0)