மெளனச் சாட்டை
நெருக்கிப் பிடித்து
இடிபாடுகளுக்கிடையில்
தக்க வைத்துக்கொண்ட இருக்கை…
ஆசுவாசப்படுத்திக்கொண்டமர்ந்த
மயிரிழை நாழிகையின் நுனியில்
கலவரம் தொற்றிக்கொள்ளும்.
கைக்குழந்தையோடு உள்ளேறி வரும்
பெண்ணுக்கு
இருக்கையை விட்டுத்தர வேண்டுமென்றும்
விட்டுத்தந்துவிட வேண்டுமென்றும்.
💬 கருத்துகள் (0)