உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

விடுமுறைக்குத் தீர்ந்து போகாத முத்தங்களின் வாசனை

விடுமுறைக்குத் தீர்ந்து போகாத முத்தங்களின் வாசனை
அலுவலக நேரங்களை இம்சித்துக்கொண்டிருந்தன.
நிலா வரும் பாதையில் காத்துக் கொண்டிருக்கும்
மின்னல்களடுக்கிய உன் முகத்தை
கூந்தல் முடி கோர்த்து அள்ளி முகரும் கனவில் இருக்கிறேன்.
இராட்சத வேகத்தோடு உருண்டோடிடும் பேருந்துக்குள்ளிருந்து
ஜன சதாப்தியின் பாய்ச்சலில் வந்து
விடுதியின் தனிமை ததும்பும் அறையிலேயே விழிக்கிறேன்.
தூக்கமின்றி நீளுமந்த இரவில்
இளையராஜா மெல்லிய குரலில்
வசைபாடுவதில் பிரியத்தனமாகி இருப்பதாகத் தெரிந்தது.
கண்காணியின் இலத்தியில் நள்ளிரவு உருட்டப்படும் சப்தம்.
தூரத்து விளையாட்டாயத்தின் மையப்பகுதியின் குழல் விளக்கு
மஞ்சள் நிறத்தைப் பீய்ச்சத் தொடங்கியிருந்தது. –
அதுவரையில் இசைக்காதிருந்த வெண் நாரைகள்
சமத்துவமாய் சிறகசைப்புகளில்
கொண்டுவந்து சேர்த்தபடியிருந்தன அந்த பாடலை..
இதயம் விரிய விரிய உள் நுழைந்த உன் வாசனை
குளிர்ந்தப் பெருமூச்சாய் வெளியேறின.

👁 1 வாசிப்பு ☰ 19 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

சா. பாலமுருகன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.