அகராதியில் இல்லாத பேரன்பில் ரகசியம் நீ!!
அகராதியில் இல்லாத பேரன்பில் ரகசியம் நீ!!
கருப்பைச் சிறைக்குள் நான் கேட்ட முதல் இசை உன் இதய துடிப்பு!!
பிரபஞ்சத்தில் ஒட்டுமொத்த மவுனத்தையும் உடைத்தது என் முதல் அழுகை!!
உன் குருதியை பாலாக மாற்றி எனக்கு ஊட்டிய சரஸ்வதி நீ!!
என் முதல் வார்த்தையை ரசிக்க நீயே உலகை மறந்தாய்!!!
என் நெற்றியில் இட்ட திலகம் தீய சக்திகளின் முற்றுப்புள்ளி!!
காலத்தின் சுழற்சியின் நான் வளர்ந்தாலும் உன் மடியில் என்றும் நான் குழந்தையே!!!
சொற்கள் தேடி அலைகிறேன் உன் அன்பை செதுக்க வழியின்றி !!
இறைவனை நான் பார்க்கவில்லை உன்னை காணும் வரை!!!
மரணமே வந்தாலும் உன் நினைவுகளை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது!!
உன்னால் உருவான இந்த உயிர் உனக்கு மட்டுமே!!!
என் முதல் எழுத்தும் நீயே!
என் இறுதி மூச்சும் நீயே!!!
காலத்தால் அழியாத ஆகச் சிறந்த காவியம் நீ அம்மா!!!
💬 கருத்துகள் (0)