அம்மா
ஒருமுறை பிறந்து என் மகளை வா கண்ணீருடன் சொல்கிறேன் என் வழிகளை …
எங்கு விழுந்தேன்,
எங்கு உடைந்தேன்,
எங்கு அழுதேன் என்று…
என்னை தாலாட்டிய தாய்க்கு தாலாட்டு பாட
நாள்தோறும் உறங்க வைத்த என்னை, என் மார்போடு உறங்க வைக்க
“பிறந்து வா”
தந்தை என்ற உறவில் என் தாயை குழந்தையை பார்க்க ஆசைப்படுகிறேன்.
கிடைக்குமா
இறைவனே?.
💬 கருத்துகள் (0)