உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அம்மா

பசி என்ற சொல்லும் முன்னே சோறு ஊட்டும்
சொர்க்கம் நீ உன் கதை தாலாட்டு உன் கோபம் வழிகாட்டி நான் விழுந்தால் தூக்கும் கை நான் ஜெயித்தால் கண் கலங்கும் கண் அனைத்தும் நீ அம்மா என்ற மூன்று எழுத்தில் ஆயிரம் அன்பு ஒளிந்துதிருக்கிறது நான் சிரிக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவள் மனம் மலர்ந்து சிரிக்கிறது நான் அழுதால் துடைக்கும் விழி, நான் தோற்றால் தேற்றும் வார்த்தை என் வாழ்வில் முதல் வெற்றி அம்மா ‌! தன் ஆசைகளை மறைத்து வைத்து என் கனவுகளை வளர்த்தவள் என் பாதையில் முட்கள வந்தாலும் தன் பாதத்தில் ஏற்றவள் உலகமே என்னை மறந்தாலும் ”என் பிள்ளை” என்று அழைப்பவள் என் உயிர் இருக்கும் வரை அல்ல‌‌, என் நினைவு இருக்கும் வரை என் இதயத்தில் வாழ்பவள் அம்மா என்னை பாலுட்டி சீராட்டி வளர்த்தவள் அம்மா காலையில் எழுப்பும் அலாரம் நீதான் எந்திரிடா மணி ஆகிவிட்டது கத்துற குறலும் நீதான் நான் சாப்பிட்டேனானு கேட்காம நீ சாப்டியானு கேட்கும் வயிறு உன்னுடையது நான் ஜெயிச்சா என் புள்ளடா ஊருக்கே சொல்லும் வாய் உன் கையால சுட்ட தோசை ஐந்து ஸ்டார் ஓட்டலும் தோத்து போகும் உலகம் தூங்கும்போது விழித்திருக்கும் கண்கள் உன்னுடையது இருக்கும் காய்ச்சலில் நெற்றி தொட்டு ஒன்னும் இல்லடா எனும் மந்திரம் நீ திடுவாய், அடிப்பாய்,அணைப்பாய்எல்லாம் அன்பின் வேறுவேறு பெயர்கள் தன் மகனை திருத்த அம்மா செய்கிறாள்.

👁 14 வாசிப்பு ☰ 2 வரிகள் ⏱ 2 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.