உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அம்மா

ஓருடலில்
ஈருயிரைச் சுமந்தவளே,
பசியென்று என் வயிறு எனக்கு சொல்லும் முன்பே அவளது செவியை எட்டிவிடுகிறதே,
என் வலிகளையும் எனைக்கண்ட மாத்திரத்தில் கண்டறிந்து மருந்தாகிறாளே, சுமந்தவளுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?
கருவில் சுமந்து
மார்பில் சுமந்து
கையில் சுமந்து
இன்றும்
என்றும்
எண்ணத்தில் சுமப்பவளே.
உயிர் கொடுத்த கடவுளாய், அனைத்து வலிகளுக்கும் மருந்தளிக்கும் மருத்துவராய்,
வாழ்க்கை பாடத்தின் ஆசானாய்,
இடுக்கண் வரும் கண் காக்கும் தோழியாய்,
இப்படி எத்தனையோ அவதாரங்களை
தன்னுள் அடக்கியவள். சொர்க்கத்தையே
தன் மடியில் கொண்டும்
எவ்வித கர்வமும் இன்றி புன்னகைக்கிறாள்.

👁 17 வாசிப்பு ☰ 17 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.