உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அம்மா

சிறுவயதில் ஓர் ஊசிக்கும், ஒரு மாத்திரைக்கும் பயந்தவள் அம்மா!திருமணத்திற்கு பிறகு, தன் கருவறையில் தன் குழந்தையை சுமப்பதற்காக எத்தனை ஊசிகள், எத்தனை மாத்திரைகள்!தன் கருவில் வளரும் குழந்தைக்காக தாங்கிக் கொண்டவள் அம்மா!சுகப்பிரசவத்தில் உடம்பில் உள்ள மொத்த எலும்பும் ஒரே நேரத்தில் உடைந்தால் எவ்வளவு வலி இருக்குமோ, அந்த வலியை விட பல மடங்கு வலியை பொறுத்துக் கொண்டு தன் குழந்தையை பெற்றெடுப்பவள் அம்மா! அறுவைச் சிகிச்சையின் போது பிரசவம் பார்ப்பவர், ஆண் மருத்துவராக இருக்கலாம், பெண் மருத்துவராகவும் இருக்கலாம், அந்தத் தருணத்தில் ஏற்படும் கூச்ச சுபாவத்தையும், தன் குழந்தைக்காகப் பொறுத்துக் கொண்டவள் அம்மா!அறுவைச் சிகிச்சையின் போது பொறுத்தப்படும் சிறுநீர்ப் பழுப்பின் வலியும், வயிற்றிலிருந்து பாதம் வரை மறுத்துப் போக, முதுகை வளைத்து முதுகின் நடு எலும்பில் போடப்படும் ஊசியின் வலியை பொறுத்துக் கொண்டவள் அம்மா! வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்த போது ஏற்பட்ட வலியை பொறுத்துக் கொண்டவள் அம்மா!தன் குழந்தை கருவறையில் இருந்து வெளியே வந்தது தெரிந்தும் பார்க்க முடியாமல் தன் குழந்தையின் அழு குரல் மட்டும் கேட்டு மயக்கத்தில் பிரசவ அறையில் வலியோடு கிடந்தவள் அம்மா!இத்தனை வலியிலும் தனக்கு பிறந்தது ஆணா? பெண்ணா? கருப்பா? சிவப்பா? என்று நினைத்துக் கொண்டு இருக்கும் தருணத்தில் தன் குழந்தையை அவளிடம் கொடுக்கும் தருணம்! அவளின் ஒட்டு மொத்த வலிகளையும், கஷ்டங்களையும் மறந்து தன் குழந்தையை அள்ளி அனைத்துக் கொள்பவள் அம்மா!தன் வலிகளையும் மறந்து, தன் பசியையும் மறந்து தான் பெற்ற குழந்தை பசியோடு இருக்குமே! என்று, ஒரு நாளைக்கு பத்து முறையாவது பாலூட்டி வளர்த்தவள் அம்மா! பத்து மாதங்கள் தன் கருவறையில் என்னைச் சுமந்தவள் அம்மா! பாலூட்ட தன் மடியில் சுமந்தவள் அம்மா! குளிப்பாட்ட தன் காலில் சுமந்தவள் அம்மா! உறங்க வைக்க தன் தோலில் சுமந்தவள் அம்மா! சோறு ஊட்ட தன் இடுப்பில் சுமந்தவள் அம்மா! இத்தனை வலிகளையும், சுமைகளையும் தாங்கிக் கொண்ட என் தாயை நான் தாங்குவது எப்போது! இப்பிறவியில் என் தாய் என்னை மகளாய்! கருவறையில் சுமந்தாள்! அடுத்த பிறவியில் என் தாயை என் கருவறையில் என் மகளாக சுமக்க வேண்டும்! சுமையாக அல்ல! சுகமாய் சுமக்க வேண்டும்! என் கருவறையில் அம்மா!!!

👁 18 வாசிப்பு ☰ 1 வரிகள் ⏱ 2 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.