உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அம்மா

உன் மடியில் கிடைத்த நிம்மதி,
உன் மடியில் மறைந்த என் கவலைகள்…
என் கண்ணீரில் தெரியும் வலி,
என் சிரிப்பில் காணும் உன் மகிழ்ச்சி…
நான் தடுமாறும் ஒவ்வொரு நேரமும்,
தாங்கி நிற்கும் உன் கரங்கள்…
நான் சொல்லாத ஆயிரம் வார்த்தையும்,
புரிந்து கொள்ளும் உன் கண்கள்…
என் கனவுக்காக உன் ஆசை மறந்தாய்,
என் வாழ்வுக்காக உன் வாழ்வு தந்தாய்…
உலகம் முழுவதும் என்னை மறந்தாலும்,
உன் அன்பு மட்டும் என்னை மறக்காது…
என் வாழ்வில் கிடைத்த வரம் நீ,
என் வாழ்நாள் முழுவதும் வேண்டும் உன் துணை…
அம்மா என்ற மூன்று எழுத்தில்,
அடங்கியிருக்கிறது என் முழு உலகம்…

👁 12 வாசிப்பு ☰ 16 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

நிவேதா ச அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.