அம்மா
அம்மாவைப் பற்றிய கவிதை:
இல்லையே!
என் நெஞ்சுக்குள் உன்னைத் தவிர யாருமில்லையே!
தோழியாக என் அருகில் நீயும் இருக்கிறாய்,
சொல்ல முடியாத சோகத்தை உள்ளே மறைக்கிறாய்.
உன் பெற்ற தாய் கூட உனக்கு இல்லையாம்,
இந்த உலகத்தில் மறு உருவத்தில் தாய் பிறந்தவள் என் மகள்!
சிலவயதிலேயே கஷ்டங்களைச் சுமந்தவள்,
கண்ணீரைத் துடைக்காமல் சோகம் கடந்தவள்.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றவள் நீ,
அதனாலே சித்தால் வேலைக்குச் செல்லும் என் அம்மாவே!
சுட்டெரிக்கும் வெயிலிலும், கல்ைல (கல்லை) சுமந்த வலியும்,
உன்னைத் தாண்டி உற்றார் உறவுகள் யாரும் இல்லையே,
உன் கண்ணீரைத் துடைக்கப் பிறந்த மகளாய் நான் இருக்கிறேன் அம்மா!
கடினமாக உழைக்கும் உன் கஷ்டத்தைப் பார்த்தபடியே, கண்ணீர் சிந்தும் நிலை இனியும் உனக்கு வராது!
நன்றாகப் படித்து ஒரு நாள் அரசு வேலை வாங்கி, என் அம்மாவை இந்த உலகத்தில் உயர்வாக நான் வைப்பேன்!
சொந்தமாக ஒரு வீடு கட்டி, அதில் உன்னை அமர்த்தி, உன் உழைப்புக்கு ஓய்வு தந்து நான் பார்த்துக் கொள்வேன்!
என் உயிர் உள்ளவரை உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன், என் அம்மாவின் முகத்தில் சிரிப்பைப் பார்ப்பதே என் லட்சியம்!
💬 கருத்துகள் (0)