மூன்று குரங்குகள்…
மூன்று குரங்குகள்..,
தேசிய கீதம் காணாமல் போச்சு,
தேசப்பற்று தொலைந்தே போச்சு!
அனைவரும் கண்மூடிப் பார்ப்போம்,
அரசியல் குரங்கின் ஆட்டத்தை!
கேட்காதே என்ற குரங்கு கூட
காதைத் திறந்து கேட்கிறது,
இலவச வாக்குறுதிகளின் பொய்யை!
விவசாயி கண்ணில் கண்ணீர்
வற்றித்தான் போச்சு,
வயலெல்லாம் வறண்டே போச்சு!
குரங்கு கொடுக்கும் வாக்குறுதிக்கு
மௌனத்தைப் பரிசளிப்போம்,
அதுவே நம் பதிலாகட்டும்!
கல்லூரியில் கஞ்சா கலாசாரமாச்சு,
கல்வி எங்கோ தொலைந்து போச்சு!
நாட்டில் நடக்கும் குரங்கு நாடகத்தை
கை கொட்டிச் சிரிப்போம்,
நாளை திருந்தும் என்று நம்புவோம்!
மாயவரம் மணிகண்டன்
💬 கருத்துகள் (0)