சுட்டு விரல்
என்றென்றும் என்னையே சுட்டிக்காட்டுதே
என் சுட்டு விரல் ஏனோ அங்கே பார்த்து நட என்கிறது
பதறிப்போன என் மனது கல்லிருக்கு தடுக்கி விழுந்து விடாதே
என்று சுட்டிக்காட்டத் துடிக்குதறிவு கண்ணிருக்கு பார்த்து நடக்கஎன
குதர்க்கமாக பேசுபவனிடம் இதனை கூறலாமா வேண்டாமா? குழப்பமாகிறது
பிழை இருக்கு
திருத்திக்கொள் என்று ஒவ்வொரு முறையும் கூறத் துடிக்கிறேன் அறிவு இருக்கிறது என்னை திருத்திக் கொள்ள
அறிவுறுத்தி விடுகிறான் பதிலால்அவன்
அச்சம் கொள்கிறது மனம் என்றும்
அவன் பிழையாகிடக் கூடாது என்று
பிழையே நீங்கள்தான் என்று
பிள்ளை எனையே சுட்டிக்காட்டுது விட்டிலாய் மாறி கருகிவிடக்கூடாது என்று
விரல் பிடித்து தடுத்திட துடிக்கிறேன் விரும்பவில்லை நான் அதனை
விட்டுவிடுங்கள் என்பவனிடம் எப்படி கூற
விடை தேடி அலைகின்றேன் நான் விட்டுவிடாதீர்கள் சுட்டிக் காட்டுங்கள் காத்திருக்கிறேன்….
💬 கருத்துகள் (0)