சுட்டுவிரல்
கண்டாலே புடிக்கல…
எப்ப பாரு என்னதான் அடிப்பாரு….
அங்கபோ இங்கபோன்னு
வேலை சொல்லுவாரு…. படிக்கலன்னு பாடாபடுத்துவாரு…
அப்பலாம் பாக்கவும் கேட்கவுமே புடிக்காத பேரு தான் அவரு பேரு …
இப்ப இங்கிலாந்துல மருத்துவச்சியா இருக்குற நானு….
எதுத்தாப்புல உட்காந்து பேசுற நோயாளிக்கு மருந்து எழுத பேரு கேக்குறேன் கம்முன்னு சொல்லுறாரு
“சண்முகம் சார்னு”…
ஆமா என்ன அடிச்சு,, பாடா படுத்தி,, “புள்ள டாக்டரு ஆயிருவா படிக்க வை பரமசிவான்னு” எங்க அப்பாட்ட சண்டை போட்டாரு சண்முகம்சாரு… “டாக்டராகிரு புள்ள”னு சொன்னது அந்த மனுசன்தே…
புடிக்காத அந்தபேரு தான் இப்பலாம் கேக்கும்போதே கண்ணீர் வருது…
சண்முகம் வாத்தியாரு…
ஆசிரியர் தின வாழ்த்துகள்…அப்பா அம்மாக்களிடம் மாணவர்களுக்காக மல்லுக்கட்டும் வாத்தியார்களுக்கு…
💬 கருத்துகள் (0)