தத்துப் பிள்ளை!
குடும்பத்தில் தனித்திருந்தேன்!
வாழ்க்கையில் தனித்திருந்தேன்!
சமுதாயத்தில் தனித்திருந்தேன்!
“மலடி” என்ற ஒற்றைச் சொல்லால்
எத்தனை வலிகளைச் சுமந்தேனே!
ஆசிரமத்தில் தனித்திருந்த நீ,
என்னை “அம்மா” என்று அழைத்த நொடியே,
என் வாழ்வே மாறியதடா,
என் தத்துப் பிள்ளையே!
உன்னாலே முழுமையானேன்!
என் கண்ணில் முதன்முறையாக
ஆனந்தக் கண்ணீரைக் கண்டேனே!
💬 கருத்துகள் (0)