உலகில் உன்னதமான உறவு அன்னை
அன்னை என்ற உறவு
புன்னகை என்ற முகவரியுடன்
எப்போதும் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது..!
கருவறையில் சந்தித்து வேறு வீட்டரையில் முடிவதில்லை எங்கள் பந்தம்,
என் இதய அறையில் பாசத்தோடு இணைந்திருப்பது அந்த பந்தம்..!
ஆயிரம் பூக்கள் மலர்ந்த வாடினாலும், அன்னை என்ற உறவு மட்டும் முகம் மலர்ந்து, என்னை வாடாதுகாத்துக் கொண்டிருக்கிறது…
நமக்குத் தேவை நம்பிக்கை ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் (அன்னை,அம்மா) அந்த கை தான் எனக்கு நம்பிக்கை!
படிப்பு ஒருவனை அறிவாளி ஆக்கும்,
அன்பு ஒன்று இருந்தால் தான் அன்னையாக்கும்..
நீ என்பது ஓர் எழுத்து
நான் என்பது இரண்டு எழுத்து
அன்பு என்பது மூன்றெழுத்து
இவற்றில் மூல எழுத்து அன்னை அவள்..,
மங்காத அந்த (அம்மா) உருவம் என் வாழ்க்கைக்கு ஒலி கொடுத்தே தீர வேண்டும் என்றும் போராடும்…
அவள் மனதில் உள்ள பாசம் அது மரணம் வரை பேசும்…
தோழமையோடு தோள் கொடுத்தாள், நான் துவண்ட பொழுது…
வளமையோடு வலிமைக்கு கற்றுக் கொடுத்தாள், நான் வீழ்ந்த பொழுது…
பரிவோடு பாசம் கொடுத்தாள், நான் தனிமையில் தவிக்கும் போது….
அன்போடு அரவணைத்தாள், என் மனம் உருகும் பொழுது…
போர்வையாக என்னை அரவணைத்தாள், நான் குளிரில் நடுங்கிய போது…
நண்பனாக நன்னெறிகள் தந்தாள், நான் பாதை தவறிய பொழுது…
தந்தையாக அறிவுரை தந்தாள், தவறுகள் நான் செய்த பொழுது…
தோழியாக ஆறுதல் தந்தாள், கண்ணீரில் நான் கலங்கிய பொழுது…
பல ஆயிரம் வரிகளில் அவளை (அம்மா) வர்ணித்தாலும், இவள் அன்பைச் சொல்ல வார்த்தை போதாது….!
– Petchiammal A
💬 கருத்துகள் (0)