உணர்வோனின் துயரம்
கண்களைத் திறந்து உலகத்தைப் பார்த்தேன்
கண்ட காட்சிகள் நெஞ்சினைக் சுட்டன!
விண்ணிலும் மண்ணிலும் மனிதரின் துயரம்
என் கண்ணீர்ப் பெருக்காய் மாறியே நின்றன!
செவிகளைத் திறந்து உலகத்தைக் கேட்டேன்
கேட்ட சொற்கள் இதயத்தைக் கிழித்தன!
பொய்களும் வம்பும் வெறுப்பின் கூச்சலும்
என் அமைதியைக் கொன்று நஞ்சாய் மாறின!
வாயினைத் திறந்து உண்மையைச் சொன்னேன்
சொன்ன வார்த்தைகள் சுமையாய் மாறின!
வெளிப்படைப் பேச்சை உலகம் வெறுக்க
என் வெளிப்படை மனமே தனியாய் நின்றதே!
உணர்ச்சிகள் இன்றி வாழும் மாந்தர்
தினமும் இங்கு மகிழ்வுடன் வாழ்கின்றார்!
அதிகமாய்ப் பார்த்து அதிகம் கேட்டு
அதிகமாய்ப் பேசி தினமும் சாகின்றேன்!
முக்குரங்கு போல உணர்வற்ற மனிதனாய்
மாறிட எனக்கும் வழிகள் இல்லையே!
மெல்லிய இதயமும் மிகுந்த உணர்வும்
எனக்களித்த வதையினைப் பொறுக்க முடியலையே!
💬 கருத்துகள் (0)