உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அந்த ஒரு சுட்டு விரல் — ஆசான்

இன்று நான்
வெற்றியின் பாதையில்
நடந்து கொண்டிருக்கிறேன் என்றால்,

என் பின்னால்
என்னைத் தள்ளிய தோல்விகள் மட்டும் இல்லை…

என் முன்னால்
என்னை வழிநடத்திய
அந்த ஆசானின் கை இருக்கிறது.

ஆசான்

நான் தோல்வியடைந்தபோது,
தேர்வில் கூட தோல்வி
என்னைத் துவளச் செய்தபோது,

முதலில் என் தவறைச்
சுட்டிக்காட்டியதும்
அவர்களின் கைதான்.

“இங்கே தவறு…”
என்று ஒரு விரல்
என்னை நோக்கி நீண்டது.

அந்த விரல்
என்னைத் தண்டிக்கவில்லை;
என் தவறை
எனக்கே உணர்த்தியது.

அன்று
அந்தச் சுட்டுவிரலைப் பார்த்து
“நான் தவறு செய்துவிட்டேனோ…”
என்று வருந்தினேன்.

ஆனால் அதே விரல்,
ஒருநாள் என்னை நோக்கி
மீண்டும் நீண்டபோது,

அது என் தவறைச் சுட்டவில்லை…
என் வெற்றியைச் சுட்டியது.

ஒரு தேர்வில்
நான் வெற்றி பெற்றபோது,
அவர்கள் காட்டிய
அந்த ஒரு கை,

என்னை
ஆயிரம் வெற்றிகளை நோக்கி
முயற்சி செய்யத் தூண்டியது.

ஒருகாலத்தில்
என் தவறைச் சுட்டிய கை,

பின்னொரு நாளில்
என் வெற்றிக்காக
கைத்தட்டியது.

நான் செய்த முயற்சியின்
வெற்றியைப் பார்த்த அந்த நொடி,
வெற்றியின் சுவை
எப்படி இருக்கும் என்பதை
முதன்முறையாக உணர்ந்தேன்.

ஆனால் அந்த வெற்றிக்குப் பின்னால்
எத்தனை தோல்விகள் இருந்தன,
எத்தனை திருத்தங்கள் அந்த ஒரு கை — ஆசான்
– கு. ரிச்சிகா ஸ்ரீ

👁 14 வாசிப்பு ☰ 52 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

ரிச்சிகா ஸ்ரீ . கு அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.