உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

தீயதை கேட்காதே, தீயதை பார்க்காதே,
தீயதை பேசாதே என்றன மூன்று குரங்குகள்;
சிலை அல்ல அவை — வாழ்க்கை சொல்லும் பாடங்கள்,
காதுக்கும் கண்ணுக்கும் நாவுக்கும் காவலான சிந்தனைகள்!

காந்தியின் கொள்கைகளில் விதைக்கப்பட்ட விதை சத்தியம்,
அவரது வாழ்க்கைக்கு வழிகாட்டிய ஒளியும் சத்தியம்;
வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும்
சத்தியத்தின் தடம் பதிக்க வேண்டும் என்பதே அவரது ஆசை!

பல நாடுகளில் சுதந்திரம் வென்ற தலைவர்கள் பதவியேற்றனர்,
ஆனால் காந்தி பதவிக்காக சுதந்திரப் போராட்டம் நடத்தவில்லை;
சுதந்திரம் வந்த நாளில் டெல்லி விழாக்கோலம் பூண்டபோது,
காந்தியோ கல்கத்தா கலவரத்தின் கண்ணீரில் நின்றார்!

ஒரு பக்கம் சுதந்திரத்தின் மகிழ்ச்சி,
மறுபக்கம் மதத்தின் பெயரில் மனித ரத்தம்;
“என் நாடு சுதந்திரம் பெற்றுவிட்டதே!” என்பதைக் காட்டிலும்,
“என் மக்கள் அமைதியாக வாழ்கிறார்களா?” என்பதே அவரது கேள்வி!

வெறுப்பில் சிக்கிய ஒருவன் பழிக்குப் பழி கேட்டபோது,
“வெறுப்பால் வெறுப்பு முடிவதில்லை” என்றார் காந்தி;
அனாதையான குழந்தையை அரவணைத்து வளர்த்து,
அன்பின் வழியில் மனிதநேயத்தை கற்றுக்கொடு என்றார்!

அதுவே காந்தியின் சத்தியம், அதுவே அவரது அகிம்சை,
அதுவே மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தின் குரல்;
எங்கே சத்தியம் இருக்கிறதோ, அங்கே வெற்றி மலரும்,
எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே மனிதம் வாழும்!

தீமையை கேட்காத காதுகளாக,
தீமையை பார்க்காத கண்களாக, பொய்யை பேசாத நாவாக,
சத்தியத்தை வாழும் இதயங்களாக நாம் மாறுவோம் —
மனிதராகப் பிறந்து மகாத்மாவாக வாழ்ந்த காந்தியை நினைவுகூர்வோம்!
– கு. ரிச்சிகா ஶ்ரீ

👁 10 வாசிப்பு ☰ 29 வரிகள் ⏱ 2 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

ரிச்சிகா ஸ்ரீ . கு அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 🏆 5 செப்டம்பர் 2026

அந்த ஒரு சுட்டு விரல் — ஆசான்

0 23
வாழ்க்கை 22 ஆகஸ்ட் 2026

மீண்டும்… ஒருமுறை…

0 21
வாழ்க்கை 22 ஆகஸ்ட் 2026

வான்மழையும் உள்ளமழையும்

0 20

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.