காதல் வந்தால்
முழுமதி எரியும்
பகலவன் தேயும்
எரிமலை குளிரும்
பனிமலை எரியும்
கனிகள் கசக்கும்
காய்கள் ருசிக்கும்
கனவுகள் மலரும்
காத்திருப்புகள் தொடரும்
சுயம் தொலையும்
அவளாய் அவனும்
அவனாய் அவளும்
அண்டம் மறந்து
அன்பினில் கலந்து
அகம் மகிழ்ந்து
ஆசைகள் அலைமோத
கடலாகும் மனம்
காதல் வந்தால்.
💬 கருத்துகள் (0)