பயணம்
என்று தொடங்கும்
என்று முடியும்
என்றுணரா பயணம்
வாழ்க்கைப் பயணம்
ஐந்தோ ஐம்பதோ
வாழத்தான் வாழ்க்கை
போகும் தூரம்
அறியா பயணம்
நிற்கும் நேரம்
தெரியா ஓட்டம்
திக்கு திசை
எங்கும் வழிகள்
மீள இயலா
பாதையில் பயணம்
இன்பமும் துன்பமும்
இரு விழிகளாய்
ஏற்றமும் இறக்கமும்
கை விரல்களாய்
திடீரென வீசும்
தென்றல் – புன்னகையாய்
பருவம் மாறிய
மழையாய் -பிணிகளும்
எது வரினும்
எதிர்க்கும் துணிவு
பண்பும் பரிவும்
அன்பும் அறனும்
ஏட்டில் மட்டும்
இனிக்கும் இயல்பு
நிகழ்காலம் இயந்திர
உலகில் இருளும்
இன்பம் தொலைத்து
துயரில் மூழ்கி
எல்லாம் பணமாய்
கல்வியும் தொழிலாய்
வலிந்து கடக்கும்
வாழ்க்கைப் பயணமிது…..
💬 கருத்துகள் (0)