உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டுவிரல்

தன்னிகர் இல்லாத் தமிழ் மொழியை

நான் கற்கத் தான் அறிந்தவற்றை

வஞ்சகம் இன்றி வளமாய் அளித்து

அகம் புறம் அழகாய் சொல்லி

அறம் வளர்த்த ஆசிரியை அவள்

பண்பாடு பாரம்பரியம் கலாச்சாரம் விருந்தோம்பலென

பக்குவமாய் எடுத்துரைத்த தாயும் அவள்

மானம் வீரம் ஒழுக்கம் நட்பு

காதல் இல்லறம் என நல்லறம்

நான் பேண நல்லது சொன்னவள்

அவள் சுட்டிய திசைதான்
முழு வாழ்க்கையையும் மாற்றியது!

வானத்தைச் சுட்டினாள்
கண்களில் நட்சத்திரங்கள் பிறந்தது

புத்தகத்தைச் சுட்டினாள்
என் வரலாறு உருவானது!

வழியைச் சுட்டினாள்
புதிய பாதைகள் பிறந்தது

தவறுகளைச் சுட்டி
திருத்தும் வழியைக் காட்டினாள்

தோல்வியைச் சுட்டி
வெற்றியின் கதவைத் திறந்தாள்

கேள்வி கேட்கும் மனங்களில்
பதில்களை நிரப்பாமல்,
கேள்வி கேட்கும் அறிவையே
விதைத்தாள்

நடத்திய பாடங்கள்
ஒவ்வொரு தலைமுறையை நடத்தியது

கரும்பலகையில் வரைந்த
சிறுகோடும்
மாணவர்களின்
வாழ்க்கையில்
வெற்றிக்கோடானது

அவள் சுட்டியது
புத்தகப் பக்கமல்ல
ஒரு புதிய உலகம்!

அவள் சுட்டியது
ஒரு பாதையல்ல…
ஒரு புதிய வாழ்க்கை!

அவள் விரல்
மையைத் தொடவில்லை—
மனங்களைத் தொட்டது!

அவள் சுட்டியதிசையில் நடந்தோம்
எங்கள் வெற்றிகள் எல்லாம்
அவள் சுட்டுவிரலின்
அடையாளங்கள்!

👁 20 வாசிப்பு ☰ 46 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

கவி கே தாமரை அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.