மூன்று குரங்குகள்
கோவம் முதல் குரங்கு..
கோவத்துல ரொம்ப அமைதியா போகுறவங்களா நீங்க??
எதுக்காகனு யோசிச்சுருக்கீங்களா??
கொஞ்சம் யோசிங்க??
கோவத்துல வார்த்தையை விடக்கூடாதுன்னு சொல்லுவாங்க…
அதுல நிறைய கருத்து வேறுபாடு வருது இப்பல்லாம் எனக்கு…
அமைதி இரண்டாம்குரங்கு..
கோவப்பட்டு திட்டிடும்போது மனசு அழுக்க சேக்காம இருக்கு…
அதேநேரம் கோவத்துல பேசாம ஒதுங்கும்போது மனச அழுக்கடிக்குது அந்த அமைதி…
வேகமா வார்த்தையை விடுறவங்க வேகமா வந்து மன்னிப்பு கேட்டுறாங்க…
மனசுல வச்சுட்டு இருக்குறவங்க மன்னிப்ப ஏத்துக்ககூட மாட்டுறாங்க…
உத்தமம் மூன்றாம் குரங்கு…
ஆனா இதெல்லாம் யாருகிட்ட யாரு..
எந்த நேரத்துல,,,
எந்த இடத்துல,,
இப்படி சிலசில உத்தமங்கள் இருக்குல…
நீங்களும் யோசிச்சு பாருங்க..
ஏதாச்சும் விளங்குனா பதில் சொல்லுங்க….
சீதாலட்சுமி வெங்கட்
💬 கருத்துகள் (0)