உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

பொருள்வயின் பிரிதல்..

நேத்தி போல இன்னைக்கும்
ஊருக்குப் போவேணாம்பா’ என்ற
மூத்தமகனின் தலைகோதி
என்முகமறிந்து முதன்முதலாய்த் தூக்கச்சொல்லிக் கைகளை உயர்த்தும்
இளையவனின் உச்சிப்பொட்டில் முத்தமிட்டு
வாழ்வைத் தொலைத்த துக்கம்
தொண்டையில் தூண்டில் முள்ளாய்ச்
சிக்கிக் கொள்ள
ஆளுக்கொரு முத்தமென
சூசகமாய்ச் சொல்லும் சத்யாவிடம்
விடைபெறத் திரும்புகையில்
நீர்க்கசியும் கண்களால் சொல்கிறாள்
‘செல்லாமை உண்டேல் எனக்குரை’.

👁 2 வாசிப்பு ☰ 13 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

க. தமிழ்வாணன் அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.