சிறகுமுளைத்த பனித்துளி
போதையின் சிறகுகளைப் பற்றிக் கொண்டு
கீழிறங்குகிறது வானம்
இரவைத்தெளித்து நிலவை வரவேற்கும்
பூமியின் வாசலில்
நட்சத்திரப் புள்ளிகளிடையே
மின்னல்கள் இட்ட கோலத்தில்
நீர்மலர் தூவி மழைத்த மேகத்தைத்
தேடியலையும் காற்றின் பெருமூச்சில்
மரங்களின் தவம் களைகிறது.
கூடுவிட்டேகும் பறவைகளின் ஓசையில்
துயிலெழுந்த சூரியனிடம்
வானத்தைத் திருப்பியளிக்கிறது
பனித்துளி.
💬 கருத்துகள் (0)