சாரல்
மனதோடு உறவாட மாலையே வேலை
தென்றல் காற்றில் தலையசைக்கும் புல்கள்
இரைகொண்டு கூடு திரும்பும் புள்கள்
கரை கொஞ்சும் நுரைகொண்ட அலைகள்
கால் நனைக்கும் காளையரும் கன்னியரும்
மஞ்சள் வெயிலும் வெள்ளை நிலவும்
ஒன்றாய் சங்கமிக்கும் ஓரங்க நாடகம்
இயந்திர உலகில் சிக்கி சருகாகிய
மனம் இளைப்பாறுகிறது
சாயும் பொழுதில்
மணல் தூவும் மழைச்சாரலில்
💬 கருத்துகள் (0)