செந்நீர் விட்டு வளர்த்தோம்
காத்திருப்புகள் பல கடந்து
கண்ணீரோடு குருதியும் மிகசிந்தி
இரவு பகல் பாராது
சொந்த நாட்டிலேயே சுதந்திரமிழந்து அன்னியனிடம் அடிமைகளாய்
அதிகாரவர்க்கத்தின் பிடியில் சிக்கி
மீண்டுவர மீதமின்றி துன்பங்கள் பலகண்டு ஆங்காங்கே அசரீரியென முழங்கி
சுதந்திர வேட்கை தூண்டிய
தூய நெஞ்சம் கொண்டு
வஞ்சம் அழிக்க வந்த
வீரர்கள் வழி சென்று
விடுதலை பெற பல
உயிர்கள் பலி கொடுத்து
சிறைவாசத்தில் சிந்திய இரத்தங்கள் சேர்த்து
செந்நீர் விட்டு வளர்த்தோம்
சுதந்திரதாகம் தீர்க்கும் விருச்சத்தை
உரமாய் ஊற்றியதெல்லாம் கண்ணீரும் இரத்தமும்
எழுச்சிமிகு கவிதைகளும்
உணர்வு மிக்க சொற்களும்
ஓங்கி ஒலித்த விடுதலைக் குரல்களுமே
நூற்றாண்டுகள் குனிந்து பணிந்த வாழ்விற்கு
நிமிர்ந்து பறக்கும் சுதந்திரம் பெற்றோம்
ஆம்
இருநூறு ஆண்டுகள்
குனிந்து பணிந்த வாழ்விற்கு
நிமிர்ந்து பறக்கும் சுதந்திரம் பெற்றோம்….
💬 கருத்துகள் (0)