விதை
ஒரு விதை – அது
நிலத்தில் புதைந்து மரமாகும்
ஒரு சொல் – அது
மனதில் விழுந்து செயலாகும்
விதைத்த விதை விருட்சமாகும்
விழுந்த சொல் விதையாகும்
சில வலிகள் வரமாகும்
சில வலிகள் உரமாகும்
சில வலிகள் உளியாகும் – செதுக்கும்
மனதில் விதைத்த விதைகள் நம்மை.
கே.தாமரைச்செல்வி
💬 கருத்துகள் (0)