ஆதலால் அவள் கற்பனை அல்ல
அத்துமீறியே அந்தி நேரத்தில் அடைக்கலம் வேண்டி உன்னிடம் நின்றேன், அனைத்தையும் மறந்து அழகினில் வீழ்ந்தேன்,
எந்தன் உயிர் தோழியே உன்னை கெஞ்சி கேட்டேன் மௌனம் மட்டும் சாதித்து என்ன கண்டாய்,
பிஞ்சு விரல் கோர்த்து உலா வர கண்டேன் கொஞ்சும் கிளி போலே சட்டென பறந்தாய்,
எஞ்சியது நினைவும் உன் கொலுசின் ஒலியும் இசையாக கோர்த்து காதினில் கேட்பேன், மழலையின் சிரிப்பில் உன் முகத்தினை காண்பேன்,
முன்னிரவு போலே இன்றிரவும் வருவேன் முகத்தினை மூடாதே முத்தம் பரிமாறும் போது, ஆதலால் நீ கற்பனை இல்லை…
💬 கருத்துகள் (0)