வாழ்க்கை 1 வாரம் முன் தனிநிலை தனித்து விடப்பட்டிருக்கிறேன், தெருவோரக் காவல் நாய் போல், தனித்து நடக்கிறேன், நிழலுடன் ஒட்டி உறவாடி, தனித்து இருக்கிறேன் கைவிடப் பட்ட கைவினை காதல் புஸ்தகம் போல், முழுதும் படி → ♥ 0 💬 0 👁 13 🔖
காதல் 1 வாரம் முன் இதுவே காதல் பித்துக்கொள், காதல் பாத்திரம் ஏந்து, கவிதைகள் கிறுக்கு, கால் கொலுசை ரசி, செல்ல பெயர் மீட்டு, முழுதும் படி → ♥ 0 💬 0 👁 13 🔖
வாழ்க்கை 1 வாரம் முன் நான் வெண்ணிற இரவில் பொன் ஒன்றைக் கண்டேன், இரத்தத்தில் குளித்த பொன் ஒன்றைக் கண்டேன், ஈமச்சடங்குகள் ஏதுமில்லை இருட்டுக்குள் வாழும் பொன் ஒன்றைக் கண்டேன், இரத்தக்கறை கொண்ட கரங்கள் கண்டேன், இரத்தினமாய் மிளிர்ந்த பொன் ஒன்றைக் கண்டேன், கண்ணாடிக்குள் என்னையே நானே பொன்னாகக் கண்டேன், பிண்டத்தின் எச்சில் இலை எனக் கண்டேன், முழுதும் படி → ♥ 0 💬 0 👁 9 🔖
வாழ்க்கை 1 வாரம் முன் பேய்களும் பிசாசுகளும் உண்மையிலேயே என்னை சுற்றி எந்தவொரு கருப்பு நிற மாயையும் இல்லை என்னை விடவும், கண்கள் திறந்தே தான் இருக்கிறது நான்கு பக்க சுவர்களை பார்த்தபடி இப்போது தான் தெரிகிறது நான் வேற்றுலகவாசி என்று, என்னை போலவும், என்னை விடவும் அழகாகவும் இருக்கும் இந்த ஜந்துக்கள் என்னிடம் இருந்து என்னையே பிரித்திருந்தாலும், நான் வேஷமிட்ட வேடன் இல்லை, முழுதும் படி → ♥ 0 💬 0 👁 9 🔖
காதல் 1 வாரம் முன் பிரிவென்பது யாதெனில் கால்கள் நான்கும் ஒன்றோடு நடக்க, கார்மேகக் கூட்டம் கூத்தாட நினைக்க, அடடா அவளின் விரல்கள் பட்டவுடன், மின்னல்கள் மிதந்து தரை வந்து தொட்டவுடன், இருந்தும் போகிறோம் உறச்சாக ஊர்வலம், இடையில் உண்டானது இடையில்லா எங்கள் பந்தம், முழுதும் படி → ♥ 0 💬 0 👁 11 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் நான் தத்தி நடக்க ஊன்றுகோலாய் இருந்த என் அன்னையின் சுட்டுவிரல், பால் மடி அறியா ஆட்டுக்குட்டிக்கு முதல் மடி என் சுட்டுவிரல், மெல்ல மென்று பழகியதும் பால் ஏக்கம் வந்திடுமோ, மடி கிட்ட நெருங்கையிலே பால் சொட்டும் கிட்டிடுதோ, தட்டிக் கொடுக்க யாருமில்லை, தாகம் போக்க நீரும் இல்லை சொல்லில் அடங்கா அன்பாய் பூத்த என் ஆசானின் சுட்டுவிரல், அன்னையின் விரல் மறந்து அண்மையில் அடைக்கலம் சேர அம்சமாய் அமைந்த என் அக்காளின் சுட்டு விரல், முழுதும் படி → ♥ 0 💬 0 👁 10 🔖
காதல் 1 வாரம் முன் அவள் எனும் மாயை போர் ஏதுமே போடாமலே வீழ்த்தினாய் வீழ்கிறேன், கண்ணோரப் பார்வையால், பேசாமலே நான் போனாலும் போகிறேன், வார்த்தைகள் உன்னோடு தான், கண்ணோடு தான், கை சேராத எண்ணங்கள் எப்போதுமே கண்முன்னே அலைவீசி சிரிக்கின்றதே, ஒரு நிழல் போலே நான் உன்னை தொடக் கொஞ்சம் பார்த்தாலும், மனமே நீ என்னை துரத்தாதே, காலோடு பேசும் கொலுசோட ஒலியே தடம் மீறி என் காதில் கேட்காதிரு, நான் கிட்டே நெருங்க அவள் என்னை நொறுக்க, அடங்காத ஆசையே அலைப்பாய்ந்திடு, முழுதும் படி → ♥ 0 💬 0 👁 14 🔖
ஹைக்கூ 2 வாரம் முன் தூது குறுஞ்செய்திக்காக அலைந்து திரிந்துக் கொண்டிருக்கும் இவ்வுலகில் புறாக்கள் கூச்சலிட்டு சிரிக்கின்றன, எனக்காவது ஏதாவது திரும்ப கிடைக்கும் என்று. ♥ 0 💬 0 👁 12 🔖
ஹைக்கூ 2 வாரம் முன் கைக்கிளை நேற்றைய முன்தினம் இன்றைய நேரத்தில் கைக்கிளை உரையாடல் பக்கம் பக்கமாய் போய்க்கொண்டே இருந்தது, இன்றிரவு சுவாரசியமாய் ஏதுமில்லை காலியான பக்கங்களுக்கு ஊதியம் இல்லா ஓய்வு. ♥ 0 💬 0 👁 13 🔖
ஹைக்கூ 2 வாரம் முன் இன்னும் வேறென்ன இருக்கு சொல் இன்னும் என்ன தயக்கம், இன்னும் என்ன பிடிவாதம், இன்னும் என்ன கோபம், இன்னும் என்ன இருக்கு, சொல் அதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்... ♥ 0 💬 0 👁 11 🔖
ஹைக்கூ 2 வாரம் முன் பறக்க போகிறோம் விண்ணோடு நாமுமே கை கோர்த்து போவோம், பால்வீதி எங்கிலும் பாடல் மீட்டுவோம், பொல்லாத இரைச்சலை காதோடு செர்க்காமல், நாம் வாங்கும் மூச்சையே தினம் கேட்டு மகிழ்வோம், விரலோடு விரல் பேச, விடையாக நீ மாற வினா என்னது எப்போதுமே நீ ஆகிறாய். ♥ 0 💬 0 👁 13 🔖
சோகம் 2 வாரம் முன் புல்லின் ஓசை யாவுமே வெறும் காணல் தான் நிஜமென்று ஏதுமில்லை, புரிந்துமே நடக்கிறேன் வெல்வெட் புல்லில் உன் ஓசை கேட்டு. ♥ 0 💬 0 👁 11 🔖