உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

துர்மரணம்

தூரிகை துணை ஏந்தி தூங்கினேன் செருக்கில்லை,

யாதுமாய் படைத்திருந்தேன் யாவரும் பாராட்டினர்,

கார்முகில் சூழ்ந்த இராவினில், கொட்டும் மழை கிட்டுமுன் இருவாழ்வியின் கூக்குரல்,

சத்தம் மருவி சங்கீத ஓசையில் சித்தம் கலைத்ததன் மேல் வெட்டிக் கோபம்,

புத்தம்புது மழை திண்ணை அருகினில் சுற்றித்திரிய பாதையில்லை ஞாளிக்கு,

வெட்கை வருகுது, குளிருமடிக்குது, இல்லம் இல்லாதோருக்கு எப்படி இருக்கும்,

விளக்கும் அமையுது இடியும் இடிக்குது, புரண்டு படுத்திருக்கிறேன், மழையோசை கேட்குது,

இப்போதும் எப்போதும் ஒரே ஏக்கம் தான், மலையோடு சரிந்து, விரல் கூட கிடைக்காத, அப்படி ஓர் துர்மரணம் இன்றைக்காவது வரலாகுமா…

👁 11 வாசிப்பு ☰ 8 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

காதல் 2 மணி முன்

காயம் ஆறுமே

0 2
காதல் 2 வாரம் முன்

பயணம்

0 17
வாழ்க்கை 8 செப்டம்பர் 2026

தனிநிலை

0 43

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.