தனிநிலை
தனித்து விடப்பட்டிருக்கிறேன், தெருவோரக் காவல் நாய் போல்,
தனித்து நடக்கிறேன், நிழலுடன் ஒட்டி உறவாடி,
தனித்து இருக்கிறேன் கைவிடப் பட்ட கைவினை காதல் புஸ்தகம் போல்,
இருந்தும் ஏதோ ஓர் உற்சாகம், சோகம் தாண்டி மிளிர்கிறது,
அதையும் கொண்டாடுகிறேன் தனித்து நின்றே,
தனிமையின் சுகம் போதும், இனி நானே தனிமையின் பேரின்பம் ஆகிறேன், என் ஊரின் ஒற்றையடி ஆலமரம் போல்,
வருபவருக்குக் நிழலாகவும், இளைப்பாற ஊஞ்சலாகவும், மீண்டும் மழையில் தனித்து நிற்கிறேன்,
நான் “தனிநிலை” தனிமரம் தானே…
💬 கருத்துகள் (0)