பிரிவென்பது யாதெனில்
கால்கள் நான்கும் ஒன்றோடு நடக்க, கார்மேகக் கூட்டம் கூத்தாட நினைக்க,
அடடா அவளின் விரல்கள் பட்டவுடன், மின்னல்கள் மிதந்து தரை வந்து தொட்டவுடன்,
இருந்தும் போகிறோம் உறச்சாக ஊர்வலம், இடையில் உண்டானது இடையில்லா எங்கள் பந்தம்,
வீட்டின் வாசல் வரை நாமும் பேசிக்கொண்டே நாழிகை மறந்து செல்வோமா,
வேண்டாம், போதும் இன்றைக்கு இந்த தூரம், சாரல் பெருகும் முன் பேருந்தை பிடிப்போம்,
கால்கள் பிரிந்தோட விரல்கள் முறிவாகி முதல் படி ஏறியதும் பிரிவென்பதை நாங்கள் விழி பார்த்துக் கொண்டே வழிமாறி சென்றோம்…
💬 கருத்துகள் (0)