சுட்டு விரல்
நான் தத்தி நடக்க ஊன்றுகோலாய் இருந்த என் அன்னையின் சுட்டுவிரல்,
பால் மடி அறியா ஆட்டுக்குட்டிக்கு முதல் மடி என் சுட்டுவிரல், மெல்ல மென்று பழகியதும் பால் ஏக்கம் வந்திடுமோ, மடி கிட்ட நெருங்கையிலே பால் சொட்டும் கிட்டிடுதோ,
தட்டிக் கொடுக்க யாருமில்லை, தாகம் போக்க நீரும் இல்லை சொல்லில் அடங்கா அன்பாய் பூத்த என் ஆசானின் சுட்டுவிரல்,
அன்னையின் விரல் மறந்து அண்மையில் அடைக்கலம் சேர அம்சமாய் அமைந்த என் அக்காளின் சுட்டு விரல்,
தெம்பாக நானே செழிப்பாக வாழ என்னையே நானே தீங்கிழைக்குமுன் தவறென்று காட்டுது என் சுட்டு விரல்,
எப்போதாவது எவரேனும் எழுத்துப் பிழை என்று சொல்லிவிடப் போகிறார்கள் என்று, முன்பே சுட்டிக்காட்டி தன் சுட்டுவிரலால் சரி செய்கிறது என் பேனா, அதனால் தான் என்னவோ நான் வாங்கும் பேனாவின் மீது அதீத ப்ரியம் எனக்கு,
இப்படியே என் சுட்டு விரலின் சுயசரிதத்தை எழுதிக் கொண்டே செல்கிறது கவிதை எழுதும் எம் பேனா…
💬 கருத்துகள் (0)