உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அன்யோன்யம்

அப்பட்டமாக தெரிகிறது எனக்கும், மற்றவருக்கும், கடவுளுக்கும் இருக்கும் அன்யோன்யம் அனைத்தும் அன்யோன்யமில்லா நெருக்கம் என்பது,

நேற்றைக்கு சிலர், இன்றைக்கு சிலர், நாளையும் சிலர், எப்போதும் சிலர் என்னுடனான அன்யோனியத்தை விட்டு பிரிந்து செல்வது, எனக்கு ஒன்றும் புதிதல்ல,

இலையுதிர் காலத்தின் காய்ந்த இலைகளுக்கு உண்டான அன்யோன்யம் கூட இவர்கள் இடத்தில் நான் கண்டதில்லை,

வாழ்க்கையை புரட்டியபடி மீண்டும் ஓர் அன்யோன்யத்தை காண்பேன், ஆனால் அவை அனைத்தும் இன்றோ நாளையோ என்ற அச்சமின்றி ஆசுவாசம் கொள்கிறேன்,

ஏனெனில் ஒவ்வொரு அன்யோன்யத்தின் முடிவிலும் புதிதான வரையறையை கற்றுணர்ந்ததால், இனி எப்போது மீண்டும் வரும் அன்யோன்யம் என்று காத்திருக்கிறேன்…

-இரகுபாலன்

👁 12 வாசிப்பு ☰ 6 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.