என்றும் உன் நினைவு
காற்றோடு பேசுதோ காதோடு பேசுதோ,
யாரோடு பேசுகிறதோ இல்லையோ, என்னிடம் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறது, உன் காதோரம் ஜிமிக்கி,
பார்க்காமல் பார்க்கிறேனே நீ பார்த்தால் தோற்கிறேன், கேட்காமல் நீ இருக்க பேசியே தீர்க்கிறேன் சாலையில் உன்னிடம்,
சைகைகள் தேவையில்லை சில்மிஷங்கள் போதவில்லை, நீ அதட்டி போனப்பின்பும் என் கண்ணில் கோபம் இல்லை, பார்க்கிறேன் உன்னை நான் விட்ட பாதையை, திரும்பிப் பார் போகலாம் மீண்டும் வந்த பாதையில்…
💬 கருத்துகள் (0)