காதல்.
ஒற்றை தலை, ஒற்றை உடல், ஒற்றை உணர்ச்சி, காதலுக்கு மட்டும் இவையெல்லாம் இரட்டிப்பாகிறது.
கண்களின் கருவிழிகளுக்கும், காதலை சொல்ல அதீத பயம், அவளைப் பார்க்கும் நேரமெல்லாம் சிமிட்டியபடியே திசைமாற்றுகிறது.
சாலையோர காணல் நீரினைப்போல், அப்பபாவது வந்து போயேன், நினைவினைக் கிழித்து நிஜத்தில்.
இன்னேரம் மழை வந்திருக்கும், எனக்குக் கிடைக்காத அவ்வத்தணையும் அனுபவத்திச் செல்கிறது நீர்.
குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு நிலவினிடம் வேண்டி நின்றேன், தொலைதூர மின்னஞ்சலை காட்டிலும் கண்ணெதிர் தோன்றும் அஞ்சல்காரன் என்பதால்.
இதுவரை ப்ளூ டிக் வரவில்லை…
💬 கருத்துகள் (0)