கடலின் மகா மௌனம்
மணலோடு மெருகேற்றி அதன் மேலே அலைகள், என் காலில் பட்டு கரை செல்லுதே,
பதினாறு நாட்கள் வயதான குழந்தை தீட்டென்ற பெயரில் கரைகின்றதே,
மணல் மீது கட்டிய பல காதல் கோட்டைகள் சில நேரம் நண்டின் குடில் ஆகுதே,
கரை வந்த தோணியின் வலை வாசம் பார்த்து தெரு நாய்கள் பட்டாளம் வெகுவாக தம்மை கவர்கின்றதே,
பொதுவாக நாமும் கடல் செல்லும் போதும், புதிதான அனுபவத்தை அலைக் காட்டுதே,
இதை விட வேறு சுகம் என்ன வேண்டும் நுனி விரல் நனைகையில் உடல் சேர்ந்து சிலிர்க்கின்றதே…
💬 கருத்துகள் (0)