கூட்டில் இன்னும் இடம் காலியாகதான் உள்ளது
அவளுக்கென ஓர் உலகம் படைக்க நான் ஒன்றும் கடவுள் இல்லை, ஆனாலும் ஓர் நினைவினை படைத்தேன்,
பிடித்த மாதிரி இல்லை என்பதால் என்னவோ, பிரிந்திருக்கலாம் அவளும் ஓர் பெண் தானே,
நிறைய முறை பறக்க கூப்பிட்டேன் இறக்கைகள் வாங்கி வந்தும் கூப்பிட்டேன் இப்போது தான் புரிகிறது
ஏன் நாங்கள் பறக்கவில்லை என்று,
ஒடிந்து விடும் முன்பே பிரிந்ததால் மனமுடைந்த வலி வெளிக் கொணர முடியாததும்,
அவளுக்கென ஓர் உலகம் வேர் யாரோ படைத்திருக்கலாம் என்றும் பிரிந்திருக்கிறோம்,
இதில் எவ்வித தவறும், எவ்வித பாவமும் அவளிடம் இல்லை, அவளும் சராசரி பெண்தானே,
விட்டுச் செல்லவில்லை விட்டு கொடுத்திருக்கிறேன், கூட்டில் இன்னும் இடம் காலியாகதான் உள்ளது, கிளையிலே தான் காத்திருக்கிறேன்…
-இரகுபாலன்
💬 கருத்துகள் (0)