மழையின் வருகை
செல்வ செழிப்பாக பெருகிவரும் மழை , நிற்க இடமில்லாமல் வாடுகிறது தெருநாய் கூட்டம்,
தாழ்வாரம் எங்கும் திடீரென முளைக்கும் காளான்கள், பிடிங்கி எறிய மனமில்லை,
தன் வாயால் கெட்டொழியும் தவளை பிள்ளைகள் அடைக்கலம் வேண்டி, பாம்பிற்கு பயந்து படுக்கையறை வந்தது,
குட்டிகளை ஈன்ற பூனைக்கு விருந்தாக ரொட்டி துண்டு, பாலை வாய்க்க அது ஒன்னும் யோகியம் உள்ளது இல்லை,
தென்னங்கீற்றை கட்டியணைத்தவாறு அணில் பிள்ளைகள், ஆட்டம் எல்லாம் முடிந்து ஆசுவாசம் வாங்க படிக்கட்டின் கீழ் குடிபெயர்ப்பு, எப்படி தூக்கி எறிய முடியும்,
புல், முள், சிப்பி, கம்பி சில நேரம் நெகிழி அத்தனையையும் பயன்படுத்தி கட்டியக் காக்கைக் கூட்டின் அஸ்திவாரத்தில் ஏதோ சிறு கோளாறு இடைவிடாது ஆடிக்கொண்டிருக்கிறது,
இனிதே ஆரம்பமானது வெள்ளி மழை ஆனந்தமாய் இரசித்தபடி நின்றாலும், பகலிலும் நான் இரசித்த நிலவின் ஒளி இன்று இரவு வந்தும் தோன்றவில்லை…
💬 கருத்துகள் (0)