உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

உறவுகள் மடிவது கண்ணாடி உடைவது போலல்ல…
அது கடற்கரை மணல் மெல்ல மெல்லக் கரைவது போன்றது.

உனது செயல்கள் மாறத் தொடங்கியபோது,
நம்மிடையே இருந்த நெருக்கம் உதிரத் தொடங்கியபோது,
அதைக் காண மறுத்தேன்.

உன் குரலில் இருந்த ஈரம் குறையத் தொடங்கியபோது,
அதில் இருந்த குழந்தைத்தனம் மெல்ல விலகியபோது,
அதைக் கேட்க மறுத்தேன்.

“நம் சூழ்நிலை சரியாகிவிடும்” என்று நான் எண்ணியபோதும்,
“பிரிவுதான் தீர்வு” என்று நீ உரைத்தபோதும்,
“அது உனக்குப் பொருந்துமா?” என்று கேட்க வேண்டிய தருணத்திலும், கேட்க மறுத்தேன்.

இப்போது புரிகிறது…
எனக்குள் இருந்த இந்த மூன்று குரங்குகளின் குணாதிசயம்தான்
ஒன்று காண மறுத்தது…
ஒன்று கேட்க மறுத்தது…
ஒன்று பேச மறுத்தது…

அன்று உன்னை இழந்ததாக நினைத்தேன்…
இன்றுதான் புரிகிறது
உன்னை இழக்கவில்லை…
உன்னைப் புரிந்துகொள்ள வேண்டிய
மூன்று வாய்ப்புகளை
நானே இழந்துவிட்டேன்.

👁 35 வாசிப்பு ☰ 22 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

Kavvinguru S அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.