ஊக்கம் முதற்படி மதுவிலக்கு அமல்படுத்திய ஊரும், கவனச் சிதறலிலிருந்து விலகி வந்த பேரும், தோல்வியின் விதிவிலக்கு. 👁 26 வாசிப்பு ☰ 3 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு K Kavvinguru S 2 வாரம் முன் · 11 அக்டோபர் 2026 + பின்தொடர் ♥ 1 🔖 சேமி 🖼 வாட்ஸ்அப் நிலைப் படம் 💬 வாட்ஸ்அப்பில் பகிர் 📘 பேஸ்புக்கில் பகிர்
வாழ்க்கை 1 மணி முன் உணர்தல் கடினம் கடினம், என்றும் கடினம். புரிந்துகொள்ள முடியாதவனிடம், புரிய வேண்டிய செய்தியைப் புரிய வைத்தல். முழுதும் படி → ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 2 வாரம் முன் மனமாற்றம் அன்று தண்ணீர் கேட்டுப் போனவனுக்கு, தேநீர் கொடுத்து வரவேற்றாள். இன்றோ வெந்நீர் தான் கேட்டேன், கண்ணீர் விட்டுச் சென்றது ஏனோ? ♥ 1 💬 0 👁 33 🔖
சிறுகதைகள் 2 வாரம் முன் விளக்கு சேயோன் காலத்தில் தீப்பந்தம் ஏந்தி, ஓட்டன் காலத்தில் அகல் ஏற்றி, முழுதும் படி → ♥ 0 💬 0 👁 22 🔖
வாழ்க்கை 2 வாரம் முன் மௌனம் மௌனம் பெருகிட, கவனம் குன்றிட, சலனம் சூழ்ந்திட, கனவு உடைந்திட, உணர்வு உறைந்திட, புரியுமே உலகம். ♥ 0 💬 0 👁 19 🔖
கல்வி
சிற்பி:
கல்லில் செதுக்கும் உளி அல்ல நீ!
மனிதனை மனிதனாய்ச் செதுக்கும் முதல் சிற்பி கல்வி நீ!
விளக்கு:
சுவரில் எரியும் தீபம் அல்ல நீ!
அறியாமை இருளைப் போக்கும் அகல்விளக்கு நீ!
செல்வம்:
திருடப்படும் தங்கம் அல்ல நீ!
கொடுக்கக் கொடுக்கப் பெருகும் அழியாத செல்வம் நீ!
ஆயுதம்:
ரத்தம் சிந்தும் கத்தி அல்ல நீ!
உலகை வெல்லும் அமைதியான பேராயுதம் நீ!
வேர்:
உயரே பறக்கும் பறவை அல்ல நீ!
உன்னைத் தரையோடு இணைத்து நிறுத்தும் ஆழமான வேர் நீ!
பாலம்:
ஆற்றைக் கடக்கும் சவுக்கு அல்ல நீ!
அறியாமையிலிருந்து அறிவுக்கு அழைத்துச் செல்லும் பாலம் நீ!
விதை:
மண்ணில் புதைந்து அழியும் விதை அல்ல நீ!
தலைமுறைகள் தாண்டி மரமாய் நிற்கும் அறிவு விதை நீ!
திறவுகோல்:
மூடிய பெட்டித் திறப்பு அல்ல நீ!
மனிதனின் திறமை கதவு திறக்கும் திறவுகோல் நீ!
ஏணி:
உயரே தொங்கும் கயிறு அல்ல நீ!
உன்னைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சேர்க்கும் ஏணி நீ!
கடவுள்:
கோவிலில் அமர்ந்திருக்கும் சிலை அல்ல நீ!
உனக்குள் இருக்கும் உண்மையான கடவுள் கல்வி நீ!