உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

காந்திஜி போற்றிய மூன்று குரங்குகள் தரும் வாழ்வியல் தத்துவத்தை விளக்கும்
மூன்று குரங்குகள் காட்டும் வழி,
முத்தான வாழ்வின் நல்நெறி!
தீயவை எதையும் பார்க்காதே,
தீமையின் பக்கம் சாயாதே!
கண்களை மூடி முதலாவது,
காட்டும் உண்மை இதுவாவது!
தீயவை எதையும் கேட்காதே,
தீச்சொல் செவியில் சேர்க்காதே!
செவிகளை மூடி இரண்டாவது,
செப்பும் செய்தி இதுவாவது!
தீயவை எதையும் பேசாதே,
தீச்சொல் பேசி வீழாதே!
வாயினை மூடி மூன்றாவது,
வகுக்கும் பாதை இதுவாவது!
பார்ப்பதும் கேட்பதும் பேசுவதும்,
நன்மையாகவே என்றும் இருக்கட்டும்!
இன்பமாய் வாழ வழி இதுவே!

👁 14 வாசிப்பு ☰ 18 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

கா.மேகலா அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 🏆 5 செப்டம்பர் 2026

சுட்டு விரல்

0 25
அம்மா 🏆 12 ஆகஸ்ட் 2026

அம்மா

0 25
அம்மா 🏆 12 ஆகஸ்ட் 2026

அம்மா

0 24

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.