உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

மூன்று குரங்குகள்

தீயதைப் பார்க்காதே
தீயதைக் கேட்காதே
தீயதைப் பேசாதே

இது காந்தியம் அன்று – இன்று

தீயதைப் பார்க்காதே – அநீதியைக் கண்டு கண்களை மூடிக்கொள்

தீயதைக் கேட்காதே – அழுகுரல் கேட்டு காதுகளை மூடிக்கொள்

தீயதைப் பேசாதே – உண்மையை அறிந்தால் வாயை மூடிக்கொள்

அன்றைக்கு அந்தக் குரங்குகள்
கண்களை மூடியது – தீமைதனைத் தவிர்க்க

காதுகளை மூடியது – தீச்சொற்களினை கேட்காதிக்க

வாயை மூடியது – தீச்சொற்களைப் பேசாதிருக்க

இன்றைக்கு குரங்குகள் மாறவில்லை
மனிதர்கள் மாறிவிட்டார்கள்

கொலைகள் நடக்கையில் – கண்களை மூடுகின்றனர்

ஒடுக்கப்பட்டோரின் ஓலங்கேட்கையில் – காதுகளை மூடுகின்றனர்

உண்மை நசுக்கப்படுகையில் – வாயை மூடுகின்றனர்

காந்தி கற்றுக் கொடுத்ததிதுவா?

தீமையைப் பார்க்காதே என்பது
அநீதியை கண்டும் காணாதிரு என்பதல்ல

கண்களை மூடுவது மட்டும் காந்தியமல்ல
அநீதியின்முன் கண்களைத் திறப்பதும் காந்தியமே

வாயை மூடுவது மட்டும் அகிம்சையல்ல
உண்மைக்குக் குரல் கொடுப்பதும் அகிம்சையே

தவறுகளைக் கேட்டும் மௌனம் காப்பது நல்லொழுக்கமல்ல

தவறுகளைத் தட்டிக்கேட்பதே மெய்யொழுக்கம்

தீமையைப் பார்க்காமல் இருப்பது அமைதியல்ல

உண்மை தெரிந்தும் உதடுகளைத் தைப்பது
அகிம்சையுமல்ல

அநீதியின் முன் கண்களை திறப்பதும்
உண்மையைக் கேட்க காதைத் திறப்பதும்
நியாயம்தனை நிலை நாட்ட
வாயை திறப்பதுமே
என்றைக்கும் மனித மாண்பு

இதுவே காந்தியமென்று அடுத்த தலைமுறைக்கு கடத்தக் கடவது.

சுயநலமாய் பேசாதே
சுயத்தை மட்டும் பார்க்காதே
சுயநலமாய் சிந்திக்காதே
அதனால் கெடுவது பொதுநலமே

இதுவே இன்றைய சமுதாயத்திற்கான வித்து

👁 15 வாசிப்பு ☰ 40 வரிகள் ⏱ 2 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

கவி கே தாமரை அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 2 வாரம் முன்

மௌனம்

0 25

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.