முளைக்க மறந்த விதை
விழுந்தது எழவில்லை
காலங்கள் கடந்தது
அதனோடு விழுந்ததெல்லாம்
எழுந்து வளர்ந்து விருட்சமானது
தோல்வியென நினைத்து
விதைத்தவனும் மறந்தான் – ஒருநாள் எதிர்பாராததொரு கணத்தில்
விழுந்தது முளைத்தது
எழுந்தது உயர்ந்தது
பெருவிருச்சமாய் வேரூன்றியது
அன்று
ஏளனமாய் பார்த்தவர்களும்
கேலி செய்தவர்களும் அறிந்தனர்
விழுந்து எழாமலிருப்பது
தோல்வியல்ல சரியான காலத்திற்கான காத்திருப்பு என்று….
💬 கருத்துகள் (0)