நினைவு
உன்னிடம் பேசத் தயங்கிய நான்,
உன் சிரிப்பைப் பார்த்து மயங்கி போனேன்.
நம் கண்கள் ஒரு சேர இருக்கும்
ஒரு நொடி பொழுதில்,
உன்னோடு ஆயிரம் பொழுதைக் கண்டேன்.
உன் பஞ்சு போன்ற கைகளை
முதல் முறை தொட்ட நொடி,
நான் அஞ்சி உறைந்தேன்.
இவ்வாறு நூறு நினைவுகள்
வந்து சென்றாலும்,
நிறைவேறாத கனவாகிய உந்தன் நினைவில் இருந்து
வெளியேறுவது எவ்வாறு?
💬 கருத்துகள் (0)