பெண் குழந்தை பாதுகாப்பு
பெண்ணே!! எந்தன் பெண் கவியே!
பெண்ணெனப் பிறந்து விட்டாயே !
இந்த யுத்த பூமியில்
நான் இனி என்ன சொல்ல…
உன்னை இனி பாதுகாக்க
எந்த ஆண் சிங்கமும் தேவையில்லையடி
பெண் சிங்கமே!!
வருங்காலத்தை தலை தூக்கி நிறுத்தும் எந்தன் எதிர்கால தங்கமே!
போலியாய் அடைந்திருந்த நீ!
இன்று வேலியை தகர்த்து வந்த தாயே!
வன்கொடுமையை நினைத்து நீ அஞ்சாதே முன்னே !
அச்சமின்றி இருந்ததால் நீ பெருமை கொள்வாய் பின்னே !
பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பெற்றோர் அறியாதது அவள் இவ்வுலகையே ஆளும் திறன் உடையவள் என்பது
பெண்ணை பாதுகாக்கவே ஆண் படைக்கப்பட்டான்
அவளுக்கு பாதகம் செய்யவா படைக்கப்பட்டான் ??
பெண்ணே! நீ எதைக் கண்டும் அஞ்சாதே !
கயவர்களை விரட்ட உன் அக்னி கொண்ட இரு விழியே போதுமடி கண்மணியே!!
முன்பு பெண் குழந்தையைப் பெற்றெடுக்க வெறுத்த இவ்வுலகம்
பின்பு பெண் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பியது இவ்வுலகம்
இன்று பெண் என்பதால் பாதுகாக்க அஞ்சுதடி இவ்வுலகம்
பெண் சிசுவின் மரணங்கள்
மனதை தைத்த காலம் மாறி
சிசுவின் மகிழ்ச்சியை மரணிக்க வைக்கும் காலமிது
💬 கருத்துகள் (0)