தியாகத்தின் நிழல்
வெற்றியின் வீரனாய் !
எல்லையின் காவலாய் !
கால் கடந்தும், குதித்துற்றும்
எம்முயிர் காக்கும் தெய்வமே!
அனுதினமும்
குடும்பத்தை அனுகா
உன் வேதனையைக் காண்கிறேன்.
ஆழித் தெண்டிரை போல்
கரைகள் உரசி – நீ
காயங்கள் காண்பதைக் காண்கிறேன்.
எம்முயிர் நீண்ட உறக்கம் கொண்ட போதும்,
உன்னுயிர் ஏன் நீங்கா உறக்கம் கொள்ளவில்லை?
சொல்!!
அது நம் நாட்டைக் காக்கும் கடமையா? அல்லது
நாட்டின் மீது உமக்குள்ள காதலா?
சொல்!!
உன் காதல்
உயிர்ந்தது தான் வீரனே!
உன் காதல் உயர்ந்தது தான்!
உன் அனுராகம் தந்தை, தாய்
மனைவி மக்கள் மீது வைப்பதன்று,
இல்லை! இல்லை!! – நீ
எங்களைக் போல் இல்லை!
பிடித்த பாடல் தேசிய கீதம்
பிடித்த கவிதை இந்திய நாடு
என்றும்மை – நீ செதுக்கும் இந்த
இந்திய இராணுவத்திற்கு
என்னால் கொடுக்க முடிந்த சல்யூட்
எனது கவிதை…
💬 கருத்துகள் (0)